பாம்பை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள்... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..!

By vinoth kumar  |  First Published Sep 18, 2020, 5:34 PM IST

சேலத்தில் பாம்பை துண்டு துண்டாக வெட்டி வாலிபர்கள் சமைத்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.  இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 


சேலத்தில் பாம்பை துண்டு துண்டாக வெட்டி வாலிபர்கள் சமைத்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.  இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள தங்கமாபுரிபட்டணம் வடபத்திரகாளியம்மன் கோயிலின் பின்பகுதியில் இருக்கும் காலியிடத்தில் கும்பலாக மது குடித்தல், சூதாடுதல், பெண்கள் சென்றால் கிண்டல் செய்து உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், கருமலைக்கூடல் போலீசில் தொடர் புகார் கொடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை, மேட்டூர் பகுதியை சேர்ந்தவர்களின் செல்போன்களில் 2 வீடியோக்கள் வைரலாகி வந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

அதில், 6 அடி நீள பாம்பை துண்டு துண்டாக 2 வாலிபர்கள் வெட்டுகின்றனர். அதனை சமைத்து சாப்பிட ஒரு கிலோ கடலை மாவு வாங்கி வரும்படி, மற்றொரு வாலிபரிடம் கூறுகிறார். தோல் உரிக்கப்பட்டு, குடல் நீக்கி மீனை வெட்டுவது போல், பாம்பை துண்டு துண்டாக வெட்டி எடுக்கின்றனர். பிறகு, ஒரு பாத்திரத்தில் மசாலா தடவி பொரித்து எடுத்து, வாழை இலையில் வைத்துள்ளனர். அதனை மது குடித்துக் கொண்டே வாலிபர்கள் ருசிக்கின்றனர். 

இந்த வீடியோ, வனத்துறை மற்றும் காவல்துறை கவனத்திற்கு சென்றதையடுத்து, அந்த 4 இளைஞர்கள் யார் என்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது, அந்த வீடியோவை பதிவிட்ட நபரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

click me!