உஷார் மக்களே... இந்த 5 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை எட்டுமாம்... வெளியான பகீர் தகவல்..!

By vinoth kumarFirst Published Sep 11, 2020, 9:37 AM IST
Highlights

தமிழக்ததில் அடுத்த 15 நாட்களில் கோவை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என்று தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக்ததில் அடுத்த 15 நாட்களில் கோவை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என்று தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 5 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய வாய்ப்பிருக்கிறதா என்று தலைமைச் செயலாளரிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. 

அதற்கு பதிலளித்த அவர் தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடுத்த 10 அல்லது 15 நாட்களில் உச்சத்தை தொடும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தற்போதுள்ள தொற்று எண்ணிக்கையைக் கொண்டு கணித்தால் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதுவரை தமிழகத்தில் இதுவரை 4,86,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 8,154 காரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!