மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் கறி விருந்தில் கலந்து கொண்ட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் கறி விருந்தில் கலந்து கொண்ட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையும் மீறி அங்கு கறி விருந்து நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களில் சிலர் மருத்துவமனைகளிலும், பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதுவரை சேலம் மாவட்டத்தில் இன்று வரை 7,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,866 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.2,165 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 93 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.