உற்சாகம் தரும் செய்தி மக்களே... 9 மாவட்டத்தில் ஜில்லுன்னு ஊத்தப்போகும் கனமழை..!

By vinoth kumar  |  First Published Jul 15, 2020, 6:17 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest Videos

undefined

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள், மதுரை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

அதேபோல், சென்னையை  பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டில் 7 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

click me!