இந்த 7 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!

Published : Jul 26, 2020, 06:24 PM IST
இந்த 7 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!

சுருக்கம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;-  வெப்பசலனம் காரணமாக பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென்மேற்கு அரபிக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?