தமிழகத்தில் நாளை முதல் இந்த பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி... முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published May 18, 2020, 3:57 PM IST

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் நேற்று பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. 


தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் நேற்று பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. நோய்த் தொற்று குறைய குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

அதன் தொடர்ச்சியாக, தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் மே 19 ( நாளை) முதல் இயங்குவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடி திருத்துமாறும், முககவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

click me!