சேலம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக மூன்று பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி, யுவஸ்ரீ மற்றும் பாரதி என்கிற 3 மாத கைக்குழந்தை என 3 மகள்கள் இருந்துள்ளனர். நகைத்தொழிலாளியான அருண், அதிகமான கடன் தொல்லையில் சிக்கித் தவித்துள்ளார். மேலும் 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி மேலும் கடனடைந்துள்ளார். இந்தநிலையில் இன்று அதிகாலையில் அருண் குடும்பத்துடன் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
undefined
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை காவல்துறை எடுத்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். லாட்டரி விற்பனை சம்பந்தமாக விழுப்புரத்தில் இதுவரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
இதனிடையே சேலத்திலும் 3 பெண்கள் உட்பட 4 பேர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக கைதாகியுள்ளனர். சேலம் மாவட்டம் சோலம்பள்ளத்தைச் சேர்ந்த சந்திரா, சங்கீதா, பாரதி, பிரியா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அதிரடியாக கைதாகியுள்ளனர். இவர்கள் 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் பலர் கைதாக வாய்ப்பிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.