பள்ளிகள் திறந்த 3 நாட்களில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகள் திறந்த 3 நாட்களில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊருடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் பள்ளிக்குச் சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான 10-ம் வகுப்பு மாணவர் விடுதியில் தங்கியிருந்ததால் அவருடன் தொடர்பில் சக மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும் பள்ளி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.