புதுக்கோட்டையில் 3 குழந்தைகளுடன் நீரில் மூழ்கிய தாய்; சோகத்தில் ஆழ்ந்த கிராமம்

By Velmurugan s  |  First Published Jul 3, 2023, 1:35 PM IST

புதுக்கோட்டை அருகே தனியார் கல்குவாரி குளத்தில் குளிக்க சென்ற மூன்று குழந்தைகள், தாய் என 4 பேர் நீரில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் சித்தன்னவாசல் அருகே கூத்தாணிப்பட்டியில் வசித்து வரும் சிவரஞ்சனி மற்றும் அவரது கணவர் பாண்டியன் உள்ளிட்ட நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பாண்டியன் விவசாய வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் மனைவி சிவரஞ்சனி கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வருவதாகவும், அடிக்கடி தன்னுடைய மூன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். 

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அன்னவாசல் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளத்தில் காலை கடன் செல்வதற்காக தன்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் நான்கு மாத கைக்குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் பாறை குளத்தில் திடீரென கால் தவறி குளத்தில் உள்ளே விழுந்து விட்டார். இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு விரைந்து வந்து மூழ்கிய நான்கு பேரையும் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். 

Tap to resize

Latest Videos

அனைவரும் அண்ணன், தம்பியா பழகும் போது கடந்த கால கலவரங்களை திரைப்படமாக எடுப்பது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி

இந்நிலையில் தகவல் அறிந்து உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பாறை குளத்தில் மூழ்கிய நான்கு பேரில் சிவரஞ்சனி மற்றும் அவருடைய இரண்டு மகள்களையும் மீட்டு உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும் இதில் மூத்த மகள் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் தற்பொழுது தாயும் இரண்டாவது மகளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 4 மாத கைக்குழந்தையை பாறை குளத்தில் தற்போது வரை தீயணைப்புத் துறையினர் பல்வேறு சிரமங்களுக்கிடையே தேடி வருகின்றனர். மேலும் பாறை குளத்தில் தாய் உட்பட மூன்று பேர் மூழ்கிய சம்பவம் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாறை குளத்தைச் சுற்றி நின்று கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது. மேலும் சிவரஞ்சனனின் உறவினர்களும் இறந்து போன குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

தேனியில் பரபரப்பு; விசாரணைக்கு சென்ற காவலரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல்

இதனால் அப்பகுதியை பெரும்சோகத்தை ஏற்படுத்தியது மேலும்சிவரஞ்சனி உட்பட நான்கு பேரும் தடுமாறி குளத்தில் விழுந்தார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!