ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி வீட்டு வாசலிலேயே 27 வயது பெண் உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published Jun 30, 2023, 4:58 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த 27 வயது பெண் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதமெபரவிடுதி  கிராமத்தைச் சேர்ந்தவர் கோபு. இவரது மனைவி வித்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கோபு வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில், வித்யா வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்து வந்தார். 

நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் திடீரென பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின் போது வீட்டு வாசலில் காய்ந்து கொண்டிருந்த பொருட்களை எடுக்கச் சென்ற வித்யா மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

கடனை கட்டுவதில் தாமதம்: அடாவடி செய்த நிதி நிறுவன ஊழியர்கள் முன் கூலி தொழிலாளி தற்கொலை

இது இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் காவல் துறையினர் மற்றும் கொத்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 27 வயதே ஆன பெண் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணம் இல்லாத ஒரே காரணம்; டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண் - படிப்பை தொடர முடியாத அவலம்

click me!