புதுக்கோட்டை | பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணியில் கிடைத்த 14-15ம் நூற்றாண்டு பழமை பொருட்கள்!

By Dinesh TG  |  First Published Jun 24, 2023, 10:35 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை பகுதியில் நநடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில், 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது
 


புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் பல அரிய வகை நவரத்தின கற்கள், பானை ஓடுகள், பல்வேறு வகையான கண்ணாடி வளையல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

இதேபோன்று 14 ஆம் மற்றும் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமான பணிகளும் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி கே சிங் பார்வையிட்டு தமிழக தொல்லியல் துறை அதிகாரி தங்கதுரை இடம் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வி கே சிங், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை தொன்மையான பழமை வாய்ந்த இடம், இங்கு நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் ஆழமான பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளும் போது இன்னும் கூடுதலான தொன்மை சின்னங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

கீழடி பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் கிடைக்கும் அதிக பொக்கிஷங்களை உலக அளவில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், மத்திய தொல்லியல் துறையின் ஒரு அங்கம் தான் தமிழகத் தொல்லியல் துறை, நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு மாநில அரசு என்ற பாகுபாடு தேவையில்லை அரிய வகை தொல்பொருட்கள் ஆராய்ச்சி செய்வது தான் முக்கியம் என்றார்.

இதையும் படிங்க;- பீர் 2க்கு 1 இலவசம்! பீரில் கிடந்த அழுக்கு பேப்பர்! அப்படித்தான் இருக்கும் என ஊழியர் எகத்தாளம்!

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இங்கு கிடைக்கும் பொருட்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லாமல் இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து அவைகளை பொக்கிஷமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார் அதற்கு அமைச்சர் இங்கு கிடைக்கும் தொன்மையான பொருட்களை வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியாது இங்கேதான் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அவைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Tap to resize

Latest Videos

பலாத்கார முயற்சி! இறுதி வரை போராடிய இளம்பெண்! கடுப்பில் ஓடும் ரயிலில் தூக்கி வீசிய கொடூர கும்பல்..

click me!