புதுக்கோட்டையில் 3 பிரிவினர் இடையேயான மோதலால் மூடப்பட்ட கோவில் 2 ஆண்டுகளுக்கு பின் திறப்பு

By Velmurugan s  |  First Published Jun 24, 2023, 9:50 AM IST

விராலிமலை அருகே இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பக்தர்கள் மகிழ்ச்சி.


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள மேலபச்சகுடி ஊராட்சி தென்னிலைபட்டியில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு நடத்தி வந்த மூன்று தரப்பினர்களுக்கு இடையே முதல் மரியாதை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு முதல் கோவில் பூட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூன்று தரப்பினரையும் அழைத்து அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராமல் இருந்து வந்தது. இதனால் திருவிழா நடத்த முடியாமலும், தினசரி வழிபாடு நடத்த முடியாமலும் பக்தர்கள், பொதுமக்கள் மனவேதனை அடைந்து வந்தனர்.

Tap to resize

Latest Videos

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இது தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடி நடவடிக்கையில் இறங்கிய புதுகோட்டை மவட்ட தேவஸ்தான அதிகாரிகள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினரையும் அழைத்து கோவில் திறக்கப்படுவதாக தெரிவித்தனர். மேற்படி முதல் மரியாதை தொடர்பாக ஏதேனும் நிவர்த்தி வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடிக்கொள்ள அறிவுறுத்தினர். 

நாங்க இருக்கோம்; ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தொலைபேசியில் உறுதி அளித்து நம்பிக்கை ஏற்படுத்திய கனிமொழி

தொடர்ந்து திருக்கோவில் தஞ்சாவூர் இணை ஆணையர் ஞானசேகரன், புதுக்கோட்டை உதவி ஆணையர் அனிதா, திருக்கோவில் தக்கார் சந்திரசேகர், குளத்தூர் சரக ஆய்வாளர் யசோதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர், திருக்கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்பட்டு நித்திய பூஜை நடைபெற்றது. இதனால் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

click me!