புதுக்கோட்டையில் ஆட்டோ மீது பேருந்து மோதி கோர விபத்து; 5 பேர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Jun 22, 2023, 10:54 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி  அருகே ஆட்டோ மீது அரசு நகரப்பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். 


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் பகுதியை சேர்ந்த நான்கு பேர் கறம்பக்குடியில் நடைப்பெற்ற தங்களது உறவினர் சடங்கு விழாவில் பங்கேற்று விட்டு ஆட்டோவில் ஊர் திரும்பி உள்ளனர். அப்போது அவர்கள் அம்புக்கோவில் அனுமார் கோயில் வளைவு அருகே சென்ற போது கந்தர்வகோட்டையிலிருந்து கறம்பக்குடி நோக்கி சென்ற ஜி-2 என்ற அரசு நகர பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்தது. இந்த  விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து அருகே இருந்தவர்கள் காயம் அடைந்த ஐந்து பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

ஆளுநரை தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை - ஆ.ராசா ஆவேசம்

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் 5 பேருக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐந்து பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து கறம்பக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

15 டிராக்டர்கள்; 500 வகையான சீர்வரிசை - மகளின் திருமணத்தில் ஊரையே அசர வைத்த தொழிலதிபர்

click me!