புதுக்கோட்டையில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்; பொதுமக்கள் ஆரவாரம்

By Velmurugan s  |  First Published Jun 19, 2023, 2:25 PM IST

புதுக்கோட்டை  அருகே உள்ள வல்லத்திராக் கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் போட்டிப்போட்டு சீறிப்பாய்ந்த காளைகளை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.


புதுக்கோட்டை அருகே உள்ள வல்லத்திராக் கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி நாளை முன்னிட்டு  மாட்டுவண்டி பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பந்தயமானது சிறிய மாடு, பெரியமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தேனி சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

Tap to resize

Latest Videos

undefined

பெரிய மாட்டு வண்டியில் 11 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 20 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு வல்லத்திராகோட்டையில் இருந்து கேப்பரை வரை 12 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு கைக்குறிச்சி வரை 9 கிலோமீட்டர் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை; பாபநாசம் பட பாணியில் உடலை புதைத்த கொடூரம்

வல்லத்திராக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி, புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் மாட்டு வண்டி ஜோடிகள் நான்கு கால் பாய்ச்சலில் போட்டி போட்டு துள்ளிக்குதித்து ஒன்னறையொன்று‌முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால்  போட்டியைக் காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி ஜோடிகளையும் அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத்துடன்  கண்டு ரசித்தனர். 

திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே நாட்டை ஆள தகுதியென நினைப்பதா? சீமான்  ஆவேசம்

மேலும் இந்த பந்தயத்தில் திருச்சியை சேர்ந்த ஒரு மாட்டு சாலையில் சீறி பாய்ந்து சென்றபோது அந்த மாட்டு வாண்டியின் சக்கரம் வளைந்தது. இருப்பினும் அந்த வண்டியின் சாரதி போட்டியின் இலக்கை நோக்கி வளைந்த சக்கரத்துடன் ஓட்டியது பார்வையாளர்களை வியக்க வைத்தது.

click me!