பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடிக்கு கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் டும் டும் டும்

By Velmurugan s  |  First Published Jun 17, 2023, 11:36 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடிக்கு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 30). இவரும் அரவம்பட்டியைச் சேர்ந்த சொர்ணபாப்பா (23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டைச் சேர்ந்த பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

மேலும் திருமணம் செய்து வைக்கவும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க யாரும் முன் வராத நிலையில் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையை நாடியுள்ளனர். 

தண்ணீருக்கு பதிலாக ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த தாய்; பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ சின்னத்துரை உடனடியாக அரவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் அரியாணிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களது முன்னிலையில் சிவராஜ் மற்றும் சொர்ண பாப்பாவிற்கு எம்எல்ஏ சின்னத்துரை காதல் திருமணத்தை நடத்தி வைத்தார். 

இரகசிய ஆடியோவை அம்பலப்படுத்திய காவல்துறைக்கு எதிராக திமுக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலேயே வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

click me!