என்ன ஒரு கடமை உணர்ச்சி! சாமி கும்பிட்டு வருவதற்குள் சூப்பரா சாலை அமைத்த காண்ட்ராக்டர்! பொதுமக்கள் அதிர்ச்சி!

By Dinesh TG  |  First Published Jun 5, 2023, 6:00 PM IST

புதுக்கோட்டை நகரில் சாந்தநாதர் சுவாமி தெருவில் உள்ள சாந்தாரம்மன் கோயில் முன்பு புதிய சாலை அமைக்கும்போது கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிற்கும் பகுதியை மட்டும் விட்டு விட்டு மற்ற இடங்களில் சாலை அமைத்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 


புதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் தற்பொழுது அந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட கீழ ராஜவீதி அருகே சாந்தநாதசுவாமி தெருவில் உள்ள சாந்தாரம்மன் கோயில் முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை அமைக்கும் போது கோயில் அருகே ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் சாலை அமைப்பவர்கள் வாகனங்கள் நின்ற இடத்தை விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் சாலை அமைத்துவிட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



ஏற்கனவே பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கும் பொழுது முறையாக அமைக்கபடுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வரக்கூடிய நிலையில், புதிய சாலை போடும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை கூட அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு சாலை அமைக்காமல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு புதிய சாலை அமைத்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில் உடனடியாக இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விடுபட்ட இடத்திலும் வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு சாலையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

click me!