பொன்னமராவதியில் சரக்கு வாகனம் மோதி வடமாநில தொழிலாளர் தலை சிதைந்து பலி

By Velmurugan s  |  First Published May 23, 2023, 12:28 PM IST

பொன்னமராவதியில் டாட்டா ஏசி வாகன மோதியதில் ராஜஸ்தானை சேர்ந்த வட மாநில கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் விபத்தில் காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் 50க்கும் மேற்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரும், ஹரிபாபு என்பவரும் கட்டிட வேலைக்காக பொன்னமராவதி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

அப்பொழுது பொன்னமராவதியில் இருந்து திருப்பத்தூரை நோக்கிச் சென்ற 4 சக்கர டாட்டா ஏசி வாகனம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மகேந்திர சிங் மற்றும் ஹரிபாபுவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

Tap to resize

Latest Videos

கோடை மழைக்கே தாக்குபிடிக்காத விளையாட்டு மைதானம்; முதல்வர் திறந்து வைத்த 8 மாதத்தில் சேதம்

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மகேந்திர சிங் தலை சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு வடமாநில தொழிலாளியான ஹரி பாபு காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். உயிரிழந்த மகேந்திர சிங் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மூன்று மத குருமார்கள் மத்தியில் மகளின் திருமணத்தை நடத்தும் டி.எஸ்.பி..! திருமண பத்திரிகை வைரல்..!

click me!