வேங்கை வயலில் நீதிபதி சத்யநாராயணா நேரில் ஆய்வு

By Velmurugan s  |  First Published May 6, 2023, 9:42 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை நேரில் ஆய்வு செய்தார். 


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள  ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வேங்கை வயல்  கிராமத்தில் மலம் கலந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டனர். 

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் விசாரணை செய்வதற்காக வேங்கை வயல்  அரசு பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி சத்ய நாராயணா பொதுமக்களிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வு கூட்டத்திற்காக புறப்பட்டு சென்றார்.

Tap to resize

Latest Videos

வேங்கை வயல்  வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஓய்வு பெற்ற நீதிபதி சத்ய நாராயணா தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வேங்கை வயல் கிராமத்தில் மனித கழிவுகள் கலந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அந்த பகுதி மக்களுக்கு  தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர்

தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி வருவாய்த்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை செய்து வருகிறார்.

click me!