வாடிவாசலில் இருந்து காளை அவிழ்த்து விட்டபோது சீறிப்பாய்ந்து வந்த போது எதிர்பாராத விதமாக தடுப்புக் கட்டையில் மோதியதுமே சுருண்டு விழுந்ததை கண்டு விஜயபாஸ்கர் பதறிப்போனார்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது வாடி வாசல் கட்டையில் மோதி படுகாயமடைந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடசேரியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி வடசேரிபட்டியில் கடந்த 2-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை களமிறக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து காளை அவிழ்த்து விட்டபோது சீறிப்பாய்ந்து வந்த போது எதிர்பாராத விதமாக தடுப்புக் கட்டையில் மோதியதுமே சுருண்டு விழுந்ததை கண்டு விஜயபாஸ்கர் பதறிப்போனார்.
இதனையடுத்து, கருப்பு கொம்பன் காளைக்கு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பு கொம்பன் காளை இன்று உயிரிழந்து விட்டது. தனது காளை எப்படியும் மீண்டும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த விஜயபாஸ்பர் இந்த செய்தியை கேட்டதுமே அதிர்ச்சி அடைந்து கண்கலங்கினார்.
கடந்த 2018ம் ஆண்டு விராலிமலை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை வாடி வாசலுக்கு வெளியே எதிர்பாராதவிதமாக சுவற்றில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.