அட கடவுளே.. சீறிய போது வாடிவாசலில் மயங்கி விழுந்த சின்ன கொம்பன் காளை.. பதறிய விஜயபாஸ்கர்.. நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published May 2, 2023, 12:43 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடசேரியில்  பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. 


புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை வாடி வாசலில் இருந்து வெளியே வரும்போது எதிர்பாராத விதமாக கட்டையில் மோதி மயங்கி கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடசேரியில்  பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. 800 காளைகள் களம் காண உள்ள இப்போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கி வந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- BREAKING : ஏசி, வாட்டர் ஹீட்டருக்கு பயன்படுத்தினால் கூடுதல் கட்டணமா? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்.!

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை சின்ன கொம்பன் வாடிவாசலில் வெளியே வரும்போது எதிர்பாராத விதமாக கட்டையில் மோதியது. இதில், காளை மயங்கி கீழே விழுந்தது. இதனால், பதறிப்போன விஜயபாஸ்கர் உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காளையை மீட்டு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தார்.

கடந்த 2018ம் ஆண்டு விராலிமலை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை வாடி வாசலுக்கு வெளியே எதிர்பாராதவிதமாக சுவற்றில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பி பிரேக் போட்ட நபர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து.!

click me!