எங்களிடம் எந்த குறையும் இல்லாததால் வருமான வரித்துறை அதிகாரிகள் எப்போது வந்தாலும் அவர்களை காபி கொடுத்து வரவேற்போம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுச்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் கேகேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று கூறி இருக்கிறார்கள் அவர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார் என்று எண்ணுகின்றோம்.
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக நிறைய கோப்புகள் ஆளுநரிடம் அனுப்பப்பட்டுள்ளன. அதில் சிறிய அளவிலான கோப்புகளுக்கு அனுமதி தந்துள்ளார். இன்னும் கோப்புகள் உள்ளன. இஸ்லாமியர்கள் சிறைவாசிகளை பொறுத்த வரை நாங்கள் எடுத்த நடவடிக்கையை போல் எந்த அரசும் எடுக்கவில்லை.
undefined
வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை? பட்டியல் இன ஆணைய இயக்குநர் பரபரப்பு தகவல்
இஸ்லாமிய சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்ட கோப்புகளில் சில கோப்புகளுக்கு கையொப்பமாகி உள்ளது. இன்னும் ஆளுநர் அனுப்ப வேண்டிய கோப்புகள் உள்ளன. கொடநாடு வழக்கில் தடையவியல் அறிக்கையினை பொறுத்து அடுத்த கட்ட விசாரணை நகரும்.
மகளிர் இலவசப் பேருந்தில் திடீர் ஓட்டை; ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் பயணி காயம்
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பாஜகவிடம் கொத்தடிமைகளாக அவர்களது கட்சியை அடுகு வைத்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை கொடநாடு வழக்கு குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை கொடநாடு வழக்குக்கு புத்துயிர் கொடுத்து செயல்பட்டு வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர். அவர் எடுத்த நடவடிக்கை தான் வழக்கு இதுவரை நகர்வதற்கு காரணம்.
எந்த நேரத்திலும், அமலாக்க துறையை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். இன்றைக்கும் இடி ரைடு யார் வந்தாலும் வரட்டும் பிரச்சனை எதுவும் இல்லை. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயமிருக்கும். எங்களுக்கு எந்த மடியிலும் கனமும் இல்லை, வழியில் பயமும் இல்லை. வந்தால் தயாராக இருக்கின்றோம். காபி விருந்து வைத்து உபசரிக்கவும் தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.