மேட்ரிமோனியல் மூலமாக பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி கொண்டு திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார்.
புதுக்கோட்டை சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மேட்ரிமோனியல் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அந்த நிறுவனத்திடம் இருந்து ஹேமமாலினி என்ற பெண் தொடர்பு கொண்டு பேசி பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி இங்கிருந்து புதுக்கோட்டைக்கு வந்து இருவரும் தம்பதியர் போன்று குடும்பம் நடத்தியுள்ளனர். ஆனால் ஒரு சில மாதங்களில் ஹேமமாலினியின் நடவடிக்கையில் சந்தேகம் வந்த ஞானசேகரன் அந்த பெண்ணின் செல்போனை சோதனை செய்தபோது அவர் இதே போன்று ஏழு நபர்களிடம் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை கைப்பற்றி உள்ளார்.
மேலும் கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த நபர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இதேபோன்று மேட்ரிமோனிக்கு தொடர்பு கொண்டு பேசிய போது ஹேமமாலினி பேசி அவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அமெரிக்காவிற்கு போவதற்கு முடிவு செய்ததையும் ஞானசேகரன் கண்டறிந்தார். தன்னுடைய லீலைகள் குறித்து ஞானசேகரன் தெரிந்து கொண்டதை அறிந்த ஹேமமாலினி புதுக்கோட்டையில் இருந்து மாயமாகி விட்டார்.
காதல் மனைவியை உயிரோடு தீயிட்டு கொளுத்திய கணவன்? படுகாயத்துடன் இளம்பெண்ணுக்கு சிகிச்சை
இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசேகரன் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல பேரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பல லட்ச ரூபாயை ஏமாற்றியது குறித்து நடவடிக்கை எடுக்கவும், இனி அந்த பெண்ணிடம் யாரும் ஏமாறாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க கோரியும் ஞானசேகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.