சேலம் மாநாட்டில் பறந்த நீட் கையெழுத்து தாள்கள்; இது தான் உங்கள் நீட் ரத்து ரகசியமா? விஜயபாஸ்கர் கேள்வி

By Velmurugan s  |  First Published Jan 23, 2024, 7:34 PM IST

நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்ட தாள்கள் அனைத்தும் திமுக இளைஞரணி மாநாட்டில் காற்றில் பறந்த நிலையில் இது தான் நீட் தேர்வுக்கு எதிரான உங்கள் ரகசியமா என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.


அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுகவின் தேர்தல் அறிக்கையான ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்ற கருத்தில் திமுகவின் தற்போதைய நிலை என்ன? திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ரகசியம் என்ன என்று கூட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டார். அதற்கெல்லாம் பதில் அளிக்காமல் ஆட்சியாளர்கள் காலம் தாழ்த்தி வந்தனர்.

நீட் ஒழிப்பிற்காக வாங்கப்பட்ட கையெழுத்து பேப்பர்கள் எல்லாம் சேலம் மாநாட்டில் கீழே கொட்டி கிடந்த காட்சி வேதனை அளிக்கிறது. இதுதான் நீட் ஒழிப்பு ரகசியமா.. ? நீட் ஒழுப்பிற்காக வாங்கப்பட்ட கையெழுத்துக்கள் சேலம் மாநாட்டில் கீழே கிடந்த காட்சிகளை நான் தொலைக்காட்சி மற்றும் சமூக வலையதளங்களில் தான் பார்த்தேன். அந்த காகதிங்கள் காலில் மிதிப்பட்ட காட்சிகள் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

Tap to resize

Latest Videos

எல்லை மீறும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்; கரூரில் கந்துவட்டி கொடுமையால் விசம் குடித்த பெண் பலி

உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் நிலை என்ன என்பது குறித்தும் திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். சுகாதாரத் துறையில் மிகப்பெரிய பணி நியமனங்கள் முடங்கி கிடக்கிறது. 1700க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 1021 பேரை மட்டுமே கவுன்சிலிங் அனைத்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் மருத்துவர்கள் மற்றும் செவியார் பற்றாக்குறை நீடிக்கிறது, மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பற்றாக்குறையும் நீடிக்கிறது. மருத்துவர் உள்ளிட்ட மருத்துவ பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே இந்த துறை வேகம் எடுக்கும். பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே சுகாதாரத் துறையை தூக்கி நிறுத்த முடியும். 

சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் திடீரென சுருண்டு விழுந்த பக்தர்; நொடிப்பொழுதில் நிகழ்ந்த சோகம்

மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். இளைஞர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். பொதுச் செயலாளர் எடப்பாடியார் இன்று பல்வேறு குழுக்களை அமைத்துள்ளார். அவருடைய வியூகம் மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு தரும். இந்த அரசு மீது தற்போது மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு விட்டது என்றார்.

click me!