ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ்பெற்றது.
undefined
இதனிடையே இந்த ஆண்டிற்கான முதலாவது ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இன்றைய போட்டியில் களம் இறங்கும் 746 காளைகளை அடக்க 297 மாடுபிடி வீரர்கள் களம் காண்கின்றனர்.
Kalaingar 100: இன்று கலைஞர் நூற்றாண்டு விழா! கலந்து கொள்ளும் ரஜினி, விஜய், கமல்! அஜித் பங்கேற்பாரா?
முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்பைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். 10 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரர் மற்றும் நீண்ட நேரம் சிறப்பாக களம் காணும் காளை உரிமையாளருக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது.