புதுக்கோட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் மீது மோதிய லாரி.. 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..!

Published : Dec 30, 2023, 07:14 AM ISTUpdated : Dec 30, 2023, 07:32 AM IST
புதுக்கோட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் மீது மோதிய லாரி.. 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..!

சுருக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் பகுதியில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு எதிரே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேனீர் கடை ஒன்று உள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் ஐயப்ப பக்தர்கள் சாலையில் நின்றிக்கொண்டும் இரண்டு வேன் மற்றும் காரில் இருந்த படியும் தேனீர் அருந்தியுள்ளனர். 

புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் பகுதியில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு எதிரே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேனீர் கடை ஒன்று உள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் ஐயப்ப பக்தர்கள் சாலையில் நின்றிக்கொண்டும் இரண்டு வேன் மற்றும் காரில் இருந்த படியும் தேனீர் அருந்தியுள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் ஏற்றிச்சென்ற  ஈச்சர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தேனீர் கடையில் தேனீர் அருந்திக்கொண்டிருந்த பக்தர்கள் மற்றும் வேன், கார் மீது மோதியது. இந்த விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாரும், தீயணைப்புத்துறையினம் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரிக்கு அடியில் சிக்கிய 5 பேர் சடலங்களை நீண்ட நேரம் போராடி மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
டாஸ்மாக் ஊழல்! டெல்லியில் எப்படி ஆம் ஆத்மி தோற்றதோ அதுபோல திமுக தோற்கும்! டிடிவி. தினகரன்!