கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலின் உண்டுயலை உடைத்து திருடியதோடு சிசிடிவி கேமராவின் முன்னதாக பழிப்புக் காட்டிவிட்டுச் சென்ற திருடர்களை 36 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து திருடியதோடு கேமராவின் முன்பாக முகத்தை காட்டி பழிப்பு செய்து காட்டியதோடு சிசிடிவி கேமராவையும் உடைத்து விட்டு தப்பி ஓடினர். அப்போது அவர்களை பிடிக்க துரத்தி சென்றவர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி தப்பி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
undefined
இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பள்ளி மாணவர் உள்ளிட்ட 17 வயதுடைய இரண்டு சிறார்களையும், முத்து(19) என்ற இளைஞரையும் அறந்தாங்கி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கைது செய்துள்ளனர். மேலும் திருட்டிற்குத் தொடர்புடைய மற்றும் திருடர்கள் பயன்படுத்திய பல்சர் பைக், ஒரு செல்போன், 4100 ரூபாய் ரொக்கப்பணம், கொரடு, கட்டிங்க் ப்ளேடு உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் போதையில் தள்ளாடிய ஐடிஐ மாணவர்கள்; வீடியொ வெளியாகி பரபரப்பு
மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆசை என்கிற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் துரிதமாக செயல்பட்ட போலீசார் 36 மணி நேரத்திற்குள்ளாக திருடர்களை கைது செய்துள்ள சம்பவத்தால் கீரமங்கலம் பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். போலீசாரின் துரித நடவடிக்கைக்கு சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D