விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு 16,000 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை தாக்கல்

By Velmurugan s  |  First Published Dec 2, 2023, 4:34 PM IST

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்தக்குவிப்பு வழக்கில் 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை நகல்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.


தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்காக 55 சதவீதம் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜய் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தலா 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை  நகல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருவரிடமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இருவரும் குற்ற பத்திரிக்கை நகல்களில் ஒரு சிலவை இல்லாமல் இருப்பதால் மீண்டும் தங்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா கேட்ட 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை இருவரிடமும் மீண்டும் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்து அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

Latest Videos

undefined

தமிழக அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு; இது தமிழக மக்களின் சாபக்கேடு - தமிழக பாஜக தலைவர் விமர்சனம்

இந்த நிலையில் இன்றைய வழக்கின் போது விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவர்கள் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் வழங்கிய தலா 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை நகல்கள் விஜய் பாஸ்கர் வழக்கறிஞரிடம் ஒப்படைத்து வழக்கு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

click me!