இப்படி செய்திட்டாரே ஆ.ராசா... பெரம்பலூரை நினைத்து அங்கலாய்க்கும் திமுகவினர்!

By Asianet Tamil  |  First Published Mar 17, 2019, 8:42 AM IST

பெரம்பலூர் தொகுதியை வெளியூர்காரருக்கு திமுக ஒதுக்கி உள்ளதால், அந்த மாவட்ட திமுகவினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது அதிருப்தியில் உள்ளனர்.
 


திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் அண்டை மாவட்டங்களன திருச்சி, கரூர் ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதை முன்பே ஊகித்திருந்த திமுகவினர், பெரம்பலூராவது தங்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். மேலும் பாரிவேந்தர் கட்சி கள்ளக்குறிச்சி தொகுதியைக் கேட்டுவந்ததால், பெரம்பலூர் நிச்சயம் கிடைக்கும் என்று திமுகவினர் நினைத்தனர்.
இதை மனதில் வைத்து திருச்சி, பெரம்பலுார், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலரும், பெரம்பலூரில் சீட்டு கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால், பெரம்பலூர் தொகுதி பாரிவேந்தர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த தேர்தல்களில் வெளியூர் ஆட்களை பெரம்பலூரில் நிறுத்தி தோல்வியே கிடைத்ததால், நினைத்து கபெரம்பலூர் தொகுதியை வலையில் மூழ்கியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவைக் குறைகூறுகிறார்கள் உள்ளூர் திமுகவினர். 
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பொது தொகுதியாக பெரம்பலூர் மாறியதால், ஆ.ராசா நீலகிரி தொகுதிக்கு மாறினார். அப்போது தென் சென்னையில் போட்டியிட வாய்ப்பு கேட்ட நடிகர் நெப்போலியனை பெரம்பலுாரில் போட்டியிட வைத்தது ஆ.ராசாதான். அந்தத் தேர்தலில் நெப்போலியன் வெற்றி பெற்றார். 2014-ல் திருச்சியைச் சேர்ந்த சீமானுார் பிரபு பெரம்பலுாரில் போட்டியிட ஆ.ராசா உதவி செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் தோல்வியடைந்தார். இதேபோல 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் சென்னையைச் சேர்ந்த சிவகாமி ஐ.ஏ.எஸ்.ஐ களமிறக்கப்பட்டார். ஆ.ராசா பரிந்துரையில்தான் சிவகாமிக்கு சீட்டுக் கிடைத்ததாகவும், அவர் தோல்வியடைந்ததாகவும் திமுகவினர் கூறுகிறார்கள்.

Tap to resize

Latest Videos


இந்த முறை எப்படியும் பெரம்பலூர் தொகுதியில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் நிற்பார் என திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால், பெரம்பலூர் தொகுதியை பாரிவேந்தர் கட்சிக்கு ஒதுக்கியபோது ஆ.ராசா தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்கிறார்கள் பெரம்பலூர் திமுகவினர். தலைமையிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி திமுகவுக்கு இந்தத் தொகுதியை ஆ.ராசா பெற்று தரவில்லையே என்ற ஆதங்கத்தில் பெரம்பலூர் திமுகவினர் உள்ளனர். மேலும் சென்னையில் வசிக்கும் பாரிவேந்தர் பெரம்பலூரில் நிற்கும்பட்சத்தில் வெற்றி வாய்ப்பை நினைத்து திமுகவினர் அச்சத்தில் உள்ளனர்.

click me!