பக்தர்கள் கூட்டத்திற்குள் அசுர வேகத்தில் புகுந்த கார்... 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!

By vinoth kumar  |  First Published Mar 10, 2019, 2:04 PM IST

பெரம்பலூர் அருகே பாதயாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


பெரம்பலூர் அருகே பாதயாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை கொண்டிருந்தனர். பாடாலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி சென்ற கார் அரசு வேகத்தில் பக்தர்கள் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சிறுவாச்சூரைச் சேர்ந்த பக்தர்கள் கலியன், பரமேஸ்வரி, காவேரி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

படுகாயம் அடைந்த மருதாம்பாள் மற்றும் சோலையம்மாள் ஆகிய இரண்டு பக்தர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். ஓட்டுநர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

click me!