பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து... 25 பேர் படுகாயம்!

By vinoth kumar  |  First Published Nov 28, 2018, 12:48 PM IST

துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 25 பேர், சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தனர்.


துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 25 பேர், சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 28க்கு மேற்பட்டோர், அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோயில் கிராமத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு நேற்று இரவு வேனில் சென்றனர். அங்கு சடங்குகளை முடித்து கொண்டு இன்று அதிகாலையில் சொந்த ஊர் புறப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

 

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிக்கெட்டு ஓடி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 25 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கி அலறி துடித்த அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 25 பேரை மீட்டு, உடனடியாக, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

click me!