ஒருகட்டத்தில் யானையிடம் விஜயன் சிக்கி கொண்டார். அவரை தும்பிக்கையால் தூக்கிய யானை சற்று தூரம் ஓடி இருக்கிறது. பின் தும்பிக்கையால் சுற்றி விஜயனை தூர வீசியது.
தொடர்ந்து விடாமல் கீழே விழுந்து கிடந்த விஜயனை காலால் மிதித்தது. இதில் விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் பென்னை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (26). இவர் வசிக்கும் கிராமம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ளது. இதனால் அங்கு யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் விஜயன் தனது நண்பர் சுரேஷ் என்பவருடன் வனத்திற்குள் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி பாட்டவயல் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக இருவரும் நடந்து சென்றுள்ளனர்.
undefined
அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் காட்டுயானை ஒன்று வந்துள்ளது. வனப்பகுதியில் இருந்த இருவரையும் கண்டு ஆக்ரோஷமடைந்த யானை துரத்தியுள்ளது. பயந்து போன இருவரும் உயிரை காப்பாற்றி கொள்ள ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனாலும் யானை விடாமல் இருவரையும் துரத்தி இருக்கிறது. ஒருகட்டத்தில் யானையிடம் விஜயன் சிக்கி கொண்டார். அவரை தும்பிக்கையால் தூக்கிய யானை சற்று தூரம் ஓடி இருக்கிறது. பின் தும்பிக்கையால் சுற்றி விஜயனை தூர வீசியது. தொடர்ந்து விடாமல் கீழே விழுந்து கிடந்த விஜயனை காலால் மிதித்தது. இதில் விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானையிடம் இருந்து தப்பித்து ஓடிய சுரேஷ், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விஜயனின் உடல் மீட்கபட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
'பெண்ணுரிமை பேசும் திரௌபதி'..! இரண்டு முறை பார்த்து உள்ளம் குளிர்ந்த ராமதாஸ்..!