மற்ற யானைகள் அனைத்தும் காட்டுக்குள் சென்றுவிட, உயிரிழந்த குட்டியை விட்டு விலகாமல் தாய் யானை புதருக்குள்ளேயே இருக்கிறது. 1 வாரமாக உணவு, தண்ணி எதுவும் அருந்தாமல் அதே இடத்தில் இருப்பதால் யானை சோர்ந்து காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இருக்கிறது பள்ளிப்பட்டி மலைக்கிராமம். இங்கு ஏராளமான எஸ்டேட்கள் உள்ளன. அதில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் ஒன்றில் கடந்த வாரம் 3 யானைகள் ஒன்றாக நின்றுள்ளன. அதைக்கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கி உயிரிழந்து கிடந்தது.
அதைச்சுற்றி அதன் தாய் யானை மற்றும் இரண்டு யானைகள் நின்றுகொண்டிருந்தன. குட்டியானையின் உடலை மீட்க வனத்துறை காவலர்கள் அதனருகே சென்ற போது, மூன்று யானைகளும் ஆக்ரோஷமடைந்து அவர்களை விரட்டியுள்ளது. இதனால் குட்டி யானை உடலை மீட்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறினர். பின் மறுநாள் மீண்டும் முயற்சி செய்தபோது தாய் யானை, குட்டி யானையை விட்டு விலகாமல் அங்கேயே நின்றிருந்தது. இதனால் இரண்டாவது நாளாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
ரவுடியின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்த திமுக பிரமுகர்..! சரமாரியாக வெட்டிப்படுகொலை..!
இதையடுத்து தாய் யானை தானாக திரும்பி காட்டுக்குள் செல்லும் வரை குட்டி யானை உடலை மீட்க வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். ஆனால் தொடர்ந்து ஆறாவது நாளாக தாய் யானை அதே இடத்தில் கண்ணீரோடு நிற்கிறது. மற்ற யானைகள் அனைத்தும் காட்டுக்குள் சென்றுவிட, உயிரிழந்த குட்டியை விட்டு விலகாமல் தாய் யானை புதருக்குள்ளேயே இருக்கிறது. 1 வாரமாக உணவு, தண்ணி எதுவும் அருந்தாமல் அதே இடத்தில் இருப்பதால் யானை சோர்ந்து காணப்படுகிறது. குட்டியானையின் உடலை மீட்க வனத்துறையினர் அருகே சென்றால் தாய் யானை ஆக்ரோஷமடைந்து அவர்களை விரட்டுகிறது.
பொதுவாக குட்டி இறந்து விட்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அதனருகே தாய் யானை நிற்கும். உடல் அழுகத்தொடங்கியதும் யானை காட்டுக்குள் சென்றுவிடும். ஆனால் ஆறு நாட்களுக்கும் மேலாக உயிரிழந்த குட்டியைவிட்டு பிரியாமல் தாய் யானை நிற்கும் சம்பவம் வனத்துறை அதிகாரிகளையும் அப்பகுதி மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஒருவாரமாக யானை எதுவும் உண்ணாமல் இருப்பதால், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை புதரின் அருகே வனத்துறை அதிகாரிகள் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
5 மாணவிகள்..! தோழிகளுடன் சேர்ந்து தோட்டத்தில் அடித்த லூட்டி..! அதிர்ந்து போன பெற்றோர்..!