நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5ம் தேதி வருகை தரவுள்ளதால் திங்கள் கிழமை முதல் 6 நாட்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தரவுள்ளார். இதன் காரணமாக தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 5ம் தேதி இங்கு யானைகளை பராமரித்து வரும் ஆஸ்கர் புகழ் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டுவதோடு, அங்குள்ள பழங்குடி மக்கள் மற்றும் பாகன்களையும் சந்தித்து பேச உள்ளார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
undefined
இந்த நிலையில் குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது. திங்கள் கிழமை முதல் வரும் 5ம் தேதி வரை 6 நாட்கள் யானைகள் முகாம் மூடப்படுவதாகவும், மற்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடையில்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.