நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தாய், மகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப் பகுதியை ஒட்டி உள்ள பகுதியாகும் இப்பகுதியில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான்கள் என அனைத்து விலங்குகளும் வாழும் பகுதியாகும். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவர் தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும், அஷ்வதி என்ற மகளும் உள்ளனர். அஷ்வதி கூடலூர் கல்லூரியில் பயின்று வருகிறார். நேற்று காலை வேளையில் சுமித்ரா தனது மகள் அஷ்வதியை கல்லூரிக்கு அனுப்புவதற்காக வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார். சுமித்ரா மற்றும் அஷ்வதி நடந்து சென்ற பாதை வனப்பகுதியில் உள்ளதால் திடீரென வனப்பகுதியில் மூங்கில் காடுகளுக்கு இடையே இருந்து சாலைக்கு வந்த காட்டு யானைகள் சுமித்ரா மற்றும் அஷ்வதியை துரத்தியுள்ளது.
undefined
உளுந்தே இல்லாமல் ஆயிரம் வடை சுடும் திறமை கொண்டவர் பிரதமர் மோடி - ஐ.லியோனி விமர்சனம்
அச்சமயம் அஷ்வதி தப்பி ஓடும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். மகள் அஷ்வதியை தாயார் சுமித்ரா தூக்கிக்கொண்டு தப்பியோட முயற்சிக்கும் சமயத்தில் துரத்தி வந்த குட்டியானை முதலில் மகள் அஷ்வதியை தூக்கி எறிந்ததாகவும், பின்னர் அஷ்வதியின் தாயார் சுமித்ராவை தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலை அமைப்பதற்காக தோண்டி எடுத்து வீசப்பட்ட எழும்புக்கூடுகள்; சமாதிகளை காணவில்லை என உறவினர்கள் கதறல்
இந்நிலையில், அவ்வழியாக வந்தவர்கள் கூச்சலிடவே காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. பலத்த காயமடைந்த சுமித்ரா மற்றும் அஷ்வதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதில் தாயார் சுமித்ராவுக்கு இருதய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நெஞ்சு எலும்பு முறிந்து இருதயத்தில் குத்தியுள்ளதாக கூடலூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆபத்தான நிலையில் பலத்த காயம் அடைந்துள்ள சுமித்ராவை அறுவை சிகிச்சைக்காக கேரளா மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.