பூமியை தாக்கும் சோலார் புயல்.. என்னென்ன பாதிப்புகள்? நாசா விஞ்ஞானிகள் பகீர்..!

By vinoth kumar  |  First Published Apr 4, 2022, 1:02 PM IST

11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். இதுபற்றி நாசா விஞ்ஞானிகள், நடப்பாண்டில் அதிகளவு காந்த புயல் வீசக்கூடும். இதனால் விண்வெளியில் சேட்டிலைட், அலைபேசி அலைவரிசை பாதிக்கலாம் என எச்சரித்தனர்.


சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில் வரும் நாட்களில் இதன் வீரியம் அதிகரிக்கும் என விஞ்ஞானிக‌ள் தெரிவித்துள்ளனர்.

இதன் தாக்கம் குறித்து கொடைக்கானலில் உள்ள மத்திய அரசின் வான் இயற்பியல் ஆராச்சி மையம் கூறுகையில்;- 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். இதுபற்றி நாசா விஞ்ஞானிகள், நடப்பாண்டில் அதிகளவு காந்த புயல் வீசக்கூடும். இதனால் விண்வெளியில் சேட்டிலைட், அலைபேசி அலைவரிசை பாதிக்கலாம் என எச்சரித்தனர்.

Tap to resize

Latest Videos

இதையடுத்து கொடைக்கானல் வானியற்பியல் மையத்தில் சூரியனை 4 தொலைநோக்கிகள் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர். சில நாட்களாக சூரியனில் கரும்புள்ளிகள் அதிகளவு தோன்றி வருவதால் இனிவரும் நாட்களில் இதன் வீரியம் அதிகரித்து சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வரும் வாய்ப்புள்ளது. செல்போன், செயற்கைகோள், GPS என தொலைத்தொடர்பு சேவையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.  பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். சூரியனை இனிவரும் நாட்களில் அதிக அளவு கண்காணிக்க மையத்தில் முடிவு செய்துள்ளோம், என்றார். சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியாகவும் சக்திவாய்ந்த காந்த புயல் பூமியின் வளிமண்டலத்தை தக்க கூடும் என்று ஏற்கனவே நாசா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!