ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8-ம் தேதி குன்னூரில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மூப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழப்புக்கு மோசமான வானிலையே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8-ம் தேதி குன்னூரில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விமானப்படை கேப்டன் வருண் சிங் மீட்டு வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, எப்படியாவது அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதால் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 1 5-ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விமானப்படை தளபதி மானவேந்திரா சிங் தலைமையிலான முப்படை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக்குழு சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தது. விமானியின் குரல் பதிவுகள் அடங்கிய கருப்புப் பெட்டியை சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றியது. இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய 3 பேர் கொண்ட முப்படையின் விசாரணை முடிவடைந்துள்ளது. அதில், மோசமான வானிலையை கணிக்க தவறிய விமானிகளின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.