Varun Singh: 80% தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை.. பெங்களூரு அழைத்து செல்லப்படுகிறார் வருண் சிங்..!

By vinoth kumar  |  First Published Dec 9, 2021, 1:54 PM IST

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த வருண் சிங் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த வருண் சிங் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். இந்த ஹெலிகாப்டர் 5 நிமிடங்களில் தரையிறங்க உள்ள நிலையில் காட்டேரி பார்க் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் தீப்பிடித்தது.

Tap to resize

Latest Videos

undefined

ஒன்றரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்துள்ளது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தில் பிபின் ராவத்தின் மனைவி உட்பட 13 பேர் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. இதில் கேப்டன் வருண் சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக உள்ளதாக  மருத்துவமனை தரப்பில்கூறப்படுகிறது. வருண் சிங்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக வருண் சிங் பெங்களூரு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உள்ளனர். இவருக்கு இங்கு அளிக்கப்படும் சிகிச்சை போதுமானதாக இருக்காது. உயர் தர சிகிச்சை அளிக்க உள்ளதால் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறார். இருப்பினும் அவரை சாலை வழியாக கொண்டு செல்வதாக அல்லது ஹெலிகாப்டரில் கொண்டு செல்லலாமா என்பது குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகிறது. பெங்களூரு கமாண்டோ மருத்துவமனை பொறுத்தவரையில் தென் மாநிலங்களிலேயே மிகச்சிறந்த ராணுவ மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. 

 ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது தொடர்பான விவரங்கள் தெரியும் வரும் என்பதால் வருண் சிங்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதால் அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. வருண் சிங் 2020ஆம் ஆண்டு வான்வழி அவசர நிலையின் போது தனது LCA தேஜாஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக சௌர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது குறிப்பித்தக்கது. 

click me!