"தமிழக அரசு தான் எல்லாத்துக்கும் காரணம்" -நீலகிரியில் சீமான் சீற்றம் ...

By Asianet Tamil  |  First Published Aug 16, 2019, 7:48 AM IST

நீலகிரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த சீமான் தமிழக அரசை கடுமையாக குற்றம் சாற்றினார் .


நீலகிரியில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை, மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்தது . பலர் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு , உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார் .

Latest Videos

undefined

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

"திமுக , அதிமுக ஆகிய கட்சிகள்  மாறி, மாறி குறைகூறி கொண்டு இருக்கின்றன . அதை விடுத்து நிவாரண பணிகளில் அவர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். இவ்வளவு சேதத்திற்கும் தமிழக அரசின் அலட்சிய போக்கு தான் காரணம் . ஆக்கிரமிப்பு செய்யும் போதே தடுத்திருந்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. மலை காய்கறிகள் பயிரிட்டு இருந்த குத்தகைத்தார்களுக்கு அரசு அதற்குரிய இழப்பீடை வழங்க வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும் ".

இவ்வாறு சீமான் கூறினார் . 

click me!