40 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஒற்றை மரம்...!

By vinoth kumar  |  First Published Jul 1, 2019, 6:41 PM IST

நீலகிரியில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பல அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ இருந்த பேருந்தை ஒற்றை மரம் தடுத்து 40 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.


நீலகிரியில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பல அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ இருந்த பேருந்தை ஒற்றை மரம் தடுத்து 40 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து உதகைக்கு அரசுப் பேருந்து நேற்று பிற்பகல் வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்தை செல்வம் என்பவர் ஓட்டி வந்தார். உதகைக்கு வரும் வழியில் பிக்கட்டி பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் இப்பேருந்து வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனால், பேருந்திலிருந்த பயணிகள் அலறியபடி கூச்சலிட்டனர். 

Latest Videos

இருப்பினும் பக்கவாட்டில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி பேருந்து நின்றது. இதனால், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் உதகைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

click me!