சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க மக்கள் மலை பிரதேசங்களுக்கு குவிந்து வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம், இயற்கை எழில் கொஞ்சும் இடமாக திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க மக்கள் மலை பிரதேசங்களுக்கு குவிந்து வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம், இயற்கை எழில் கொஞ்சும் இடமாக திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் இங்கு, ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ணம் உள்ளது. இங்கு, எல்லா காலங்களிலும் மக்கள் வந்து செல்ல உகந்த இடமாக உள்ளது. மலையடிவார பொன்னேரி கிராமத்திலிருந்து ஏலகிரிமலைக்கு, 14 வளைவு மலைப்பாதையை கடந்து செல்லும் போது, இதமான காற்றும், இயற்கை காட்சிகளும், சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்துகிறது. கோடையின் கடும் வெயிலுக்கு, ஒரு நாள் சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இங்கு, அத்னாவூர் ஏரி படகு சவாரி, மூலிகை பண்ணை, சிறுவர் பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி, கண்ணாடி மூலிகை தோட்டம், மிதக்கும் தோட்டம், மியூசிக்கல் பவுண்டன், வாட்டர் பால்ஸ் உள்ளது.
மலை உச்சியில் முருகன் கோவில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் ஏலகிரிமலையின் அழகை ரசிக்கலாம். இங்குள்ள பரண் குடிலில் வனத்துறையினர் அனுமதி பெற்று தங்கலாம். அத்னாவூர் மற்றும் நிலாவூரில் அரசு பழத்தோட்டம், அத்னாவூரில் குழந்தைகள் பூங்கா, மங்களம் ஏரி, நிலாவூரில் தம்புரான் குளம், தேவி நாச்சியம்மன் கோவில் உள்ளது. ஏலகிரிமலையில் பாய்ந்தோடும் அத்தாறு என்ற ஆறு ஐடையனூர் என்ற இடத்தில், 30 மீ., உயரத்திலிருந்து ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியாக கீழே விழுகிறது.
காரில் வருவோர், திருப்பத்தூரிலிருந்து, 15 கி.மீ., பயணிக்க வேண்டும். நடந்து வருவோர் ஏலகிரிமலை நிலாவூரில் இருந்து, இரண்டு மணி நேர, காட்டு வழியாக வரலாம். மலையேற்ற பயிற்சிக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு, தேன், பலா, மா, கொய்யா, சிறுநெல்லி மற்றும் சாமை அரிசி வாங்கலாம். தற்போது அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வருவதால், திருப்பத்தூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருத்தணியிலிருந்து, கூடுதல் பஸ்கள் ஏலகிரிமலைக்கு இயக்க, கோரிக்கை எழுந்துள்ளது.