நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி மாற்றித்திறனாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியாகும். இப்பகுதியில் அடிக்கடி மனித, வனவிலங்கு மோதல்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இன்று பந்தலூர் அருகே உள்ள சேரன்ங்கோடு கோரஞ்சல் சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் குமார் (வயது 46). மாற்றுத்திறனாளியான இவர் சேரங்கோடு பகுதியில் இருந்து கோரஞ்சல் செல்லும் வழியில் நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்பொழுது காட்டு யானை ஒன்று குமாரை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதனைத் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் காயமடைந்த குமாரை பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனைத் தொடர்ந்து குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காட்டு யானை தாக்குதல் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சப்பந்தோடு பகுதியில் பொதுமக்கள் ஏற்கனவே இப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்து உள்ளதாகவும், தற்போது மாற்றுத்திறனாளி உயிரிழந்துள்ளதால் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்றும், வனப்பகுதியை சுற்றி மின் வேலி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் 100 கர்ப்பிணிகளுக்கு வலையல்காப்பு நடத்திய கிருத்திகா உதயநிதி
அல்லது அகழி வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சேரன் கோடு சுங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.