நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ்கம்பெனி பகுதியை சேர்ந்தவர் ரித்விக் (21). கோத்தகிரியை சேர்ந்த ரிக்ஷன்(21). இருவரும் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று இருவரும் செமஸ்டர் தேர்வை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் அதிகவேகத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
குன்னூர் அருகே கேத்தி பகுதியில் உள்ள வளைவில் அதிவேகமாக திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி இரண்டு கல்லூரிகள் மாணவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ்கம்பெனி பகுதியை சேர்ந்தவர் ரித்விக் (21). கோத்தகிரியை சேர்ந்த ரிக்ஷன்(21). இருவரும் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று இருவரும் செமஸ்டர் தேர்வை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் அதிகவேகத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, கேத்தி பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது அதிவேகமாக வளைவில் திரும்பி போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் தரதரவென இழுத்து சென்று கேரட் மூட்டை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்றுக்கொண்டிருந்த லாரி சக்கரத்தில் சிக்கி இரண்டு கல்லூரி மாணவர்களும் உடல், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் ஹெல்மெட் அணியாமல், அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று தெரியவந்துள்ளது. மேலும், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.