நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரகாஷ் (24). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் நண்பர்களுடன் சரவணம்பட்டி தங்கி வேலை பார்த்து வந்தார். பிரகாஷ் கடந்த சில வருடங்களாக ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார்.
காதலி தற்கொலை செய்து கொண்டதால் மனவேதனையில் இருந்த பட்டதாரி இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரகாஷ் (24). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் நண்பர்களுடன் சரவணம்பட்டி தங்கி வேலை பார்த்து வந்தார். பிரகாஷ் கடந்த சில வருடங்களாக ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் பிரகாஷ் கடந்த சில மாதங்களாக யாரிடமும் சரிவர பேசாமல், மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நண்பர்கள் யாரும் இல்லாத சமயத்தில் காதலி உயிரிழந்த துக்கத்தில் பிரகாஷ் விஷத்தை குடித்துள்ளார்.
சிறிது நேரத்தில் மயங்கி, வாயில் நுரை தள்ளி நிலையில் இருப்பதை கண்டு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.