கவுசல்யா தனது காதலன் மோகன் பாபுவிடம், தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு
கூறியுள்ளார். இதையடுத்து மோகன்பாபு கடந்த 19-ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, மண கோலத்தில் வந்து நிற்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வள்ளுவர்காலனி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் மோகன் பாபு (21). டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். கோத்தகிரி அருகே குமரன்காலனியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகள் கவுசல்யா (21). இவர்கள், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கவுசல்யா திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கவுசல்யாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
இது பற்றி கவுசல்யா தனது காதலன் மோகன் பாபுவிடம், தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து மோகன்பாபு கடந்த 19-ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, மண கோலத்தில் வந்து நிற்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் கவுசல்யா மற்றும் மோகன்பாபுவிடம் அவருடைய பெற்றோர் பேசாமல் இருந்துள்ளனர். மேலும், தனிக்குடித்தனம் செல்லுமாறு மோகன்பாபுவிடம் கூறியுள்ளனர். இதனால், மோகன்பாபு மனமுடைந்து காணப்பட்டார். இதனால் 20-ம் தேதி காலை மோகன்பாபு தனது மனைவி கவுசல்யாவை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்தில் உட்கார வைத்து விட்டு கோத்தகிரிக்கு சென்று விட்டு உடைகளை எடுத்து விட்டு வருகிறேன். அதுவரை காத்திருந்து என்று கூறி விட்டு கோத்தகிரி சென்றார்.
அன்று மாலை 4 மணி ஆகியும் மோகன்பாபு வராததால் கவுசல்யா அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, அவர் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவதாக கூறியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும் செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. இதனால் சந்தேகமடைந்த கவுசல்யா, மோகன்பாபுவின் அண்ணன் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர், வீட்டிற்கு சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.