நீலகிரி மாவட்டத்தில் மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று பரவலின் முதல் அலை உலகமெங்கும் வீசி முடிந்த நிலையில், 2ம் அலை தொற்று மீண்டும் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
எனவே இந்த மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், அந்தந்த மாவட்டங்களில் மாஸ்க் அணிவதைக் கட்டாயப்படுத்தியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரசின் இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் அணிவது குறைந்து உள்ளது. நீலகிரிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இரண்டாவது அலை வந்தால் கட்டுபடுத்த முடியாது. எனவே பொது இடங்களில் முக கவசம் அணியாமல் கொரோனா பரவ வழி வகை செய்வோர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு 6 மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கபடும் என மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
அதனை கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கபட்டுள்ளது. இதுவரை 30 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.