திருமண விழாவில் எனது காதலரை தான் கரம் பிடிப்பேன் என்று கூறி தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமண விழாவில் எனது காதலரை தான் கரம் பிடிப்பேன் என்று கூறி தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டககண்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு எளிமையாக திருமணம் நடத்த பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். மணமேடையில் மாப்பிள்ளை மற்றும் மணப் பெண்ணின் உறவினர்கள் மட்டுமே இருந்தனர்.
undefined
படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என கேட்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெண் சம்மதம் சொன்னால் மட்டுமே தாலி கட்ட முடியுமாம். இதேபோன்ற மணக் கோலத்தில் உள்ள மாப்பிள்ளை மணப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என இருமுறை கேட்க, அந்தப் பெண் மௌனமாக இருந்துள்ளார். ஆனால், மூன்றாவது முறை கேட்கும்போது எனக்கு சம்மதம் இல்லை எனக்கூறி அழுதுகொண்டு தாலி கட்ட விடாமல் கையை வைத்து தடுத்துள்ளார். பெற்றோர் சமாதாப்படுத்த முயன்றனர். ஆனாலும், எதுவும் பலனளிக்கவில்லை.
மணமகள் பிரியதர்ஷினி கூறுகையில்;- என்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார். அரைமணிநேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். அவர் எனக்காக தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். என் காதலரின் குழந்தைகளை நான் தான் பார்த்துகொள்ள வேண்டும். எனவே உங்களை திருமணம் செய்தால் அவரை ஏமாற்றுவது போல் ஆகிவிடும். எனவே எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறியிவிட்டு அங்கிருந்து செல்ல முற்பட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன மாப்பிள்ளை தாலி காட்டாமல் அமடையை விட்டு இறங்கி சென்றுவிட்டனர்.