நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தாருடன் இயற்கையை ரசித்தபடி மலை ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த 3ம் தேதி மாலை உதகை வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 5ம் தேதி துணைவேந்தர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து இன்று நீலகிரி மலை ரயிலில் உதகையில் இருந்து குன்னூர் வரை பயணம் செய்து இயற்கை காட்சிகளை தனது குடும்பத்தாருடன் கண்டு ரசித்தார். குன்னூரில் இருந்து மீண்டும் உதகைக்கு சாலை மார்க்கமாக வருகை புரிவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
காதலை கண்டித்த பெற்றோர்; மனமுடைந்த சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை
ஆளுநர் வருகையால் உதகை மலை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் உதகையில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி வரும் 9ம் தேதி சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் பயணித்த மலை ரயிலில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே. பிரபாகர் உடன் சென்றார்.
லெஸ்பியன் மோகத்தால் இளம் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த குடும்ப பெண்; பரிதவிப்பில் 3 குழந்தைகள்