சாகச விளையாட்டிற்காக நடைபெற்று வரும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் பல்வேறு பகுதிகளில் சாகச விளையாட்டிற்காக மேம்படுத்தும் பணிகளை நடைபெற்று வருகின்றன. ரூ.5 கோடி மதிப்பீட்டில், தனியார் பொது கூட்டு திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் சாகச
விளையாட்டுகளான ஜிப் லைன், ஜிப் மிதிவண்டி, பங்கி ஜம்பிங், தொங்கு பாலம் போன்ற சாகச விளையாட்டிற்கான பணிகளை பார்வையிட்டார்.
ரூ.5 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் பகுதியில், உணவகம் கட்டப்படும் இடத்தையும், கூடுதல் படகு இல்லம் பகுதிகளில் ரூ.3.25 மதிப்பீட்டில், சாகச மற்றும் கெம்ப்ளிங், மரவீடு அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார்.
நடைப்பெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு
கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.