கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு தொற்று

By karthikeyan V  |  First Published May 4, 2020, 3:39 PM IST

கொரோனாவிலிருந்து மீண்ட நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 


தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 3023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1379 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 30 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 1458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது ஆறுதலாக இருந்தது. ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கோயம்பேட்டினால் மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவ தொடங்கிவிட்டது. 

Latest Videos

undefined

தமிழ்நாட்டில் இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகாததால் கிருஷ்ணகிரி பச்சை மண்டலமாக நீடிக்கிறது. ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட நிலையில், கரூர் மற்றும் தேனியில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டங்களாக ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் இருந்துவந்த நிலையில், நீலகிரியில் இன்று புதிதாக 9 பேருக்கு தொற்று உறுடியாகியுள்ளது. நீலகிரியில் ஏற்கனவே 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அனைவருமே பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரியில் பாதிப்பு எதுவும் இல்லை. இந்நிலையில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 
 

click me!