நீலகிரி: குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

Published : Sep 30, 2023, 08:31 PM ISTUpdated : Sep 30, 2023, 09:43 PM IST
நீலகிரி: குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

சுருக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.  இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசியில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு, மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் செல்லும்போது மரப்பாலம் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்த தீயணைப்புத்துறை காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த விபத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை  8 ஆக அதிகரித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 2 பேருக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பிளான் இருக்கா.. இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - முழு விபரம் இதோ !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

School Holiday: மாணவர்களின் கவனத்திற்கு..! பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! அரசு அறிவிப்பு!
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!